இந்தியா

ரூ.16.5 லட்சம் கோடி விவசாயக் கடன் வழங்க இலக்கு: அமைச்சர் நிர்மலா சீதாராமன்

DIN

வேளாண் பொருள்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை நடைமுறை தொடரும் என்று பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நாடாளுமன்றத்தில் 2020-21 ஆம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து உரையாற்றி வரும் மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன் விவசாயத்துறை சார்ந்த அறிவிப்புகளை வெளியிட்டார். 

அதில் கூறப்பட்டதாவது: 

விவசாய வேளாண் பொருள்கள் கொள்முதல் முறை தொடரும். நடப்பு ஆண்டில் ரூ. 1.72 லட்சம் கோடி மதிப்பிலான விவசாயப் பொருள்கள் கொள்முதல் செய்யப்படும். 

ரூ. 16.5 லட்சம் கோடி விவசாயக் கடன்கள் தர நடப்பாண்டில் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. குறைந்தபட்ச கொள்முதல் விலை ஒன்றரை மடங்கு அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், 43 லட்சம் விவசாயிகள் நேரடியாக பயன்பெறுவர். 

2020-21 ஆம் ஆண்டில் விவசாயிகளுக்கு 75,000 கோடி உதவித் தொகை  விடுவிக்கப்பட்டுள்ளது. 

நுண்ணீர் பாசனம் மூலம் விவசாயம் செய்யும் விவசாயிகளுக்கு மானியம் வழங்க ரூ. 10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. 

கரோனா காலக்கட்டத்தில் 80 கோடி மக்களுக்கு உணவு தானியங்கள் தடையின்றி வழங்கப்பட்டது.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்து கொண்டுள்ளனர்.  இ-நாம் திட்டத்தின் கீழ்  இணையவழியாக மேலும் 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன என்றார். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஓடிடியில் மஞ்ஞுமெல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

SCROLL FOR NEXT