இந்தியா

தில்லியில் கடும் போக்குவரத்து நெரிசல்

விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கான தில்லியின் எல்லைகள் திங்கள்கிழமை பல இடங்கள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

PTI

விவசாயிகளின் தொடர் பேரணி காரணமாக ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசத்துக்கான தில்லியின் எல்லைகள் திங்கள்கிழமை பல இடங்கள் மூடப்பட்டதால் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. 

சிங்கு, காசிப்பூர் மற்றும் திக்ரி எல்லைகளில் தொடர்ந்து கடந்த இரண்டு மாதங்களுக்கும் மேலாக கடும் பாதுகாப்புப் பணிகளில் காவல்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.

மேலும், தில்லி போக்குவரத்து காவல்துறை போக்குவரத்து பாதிப்புக்குள்ளான பகுதிகள் குறித்து பயணிகளுக்கு எச்சரிக்கை விடுத்து மாற்று வழிகளைப் பரிந்துரைத்து வருகின்றது. எல்லையை மூடுவதால் ஐ.எஸ்.பி.டி ஆனந்த் விஹார் முதல் காசிப்பூர் வரை சாலை எண்.56 இல் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. 

பரிந்துரைக்கப்பட்ட மாற்றுவழிகள் காலை 10 மணிக்கு முதல் திறக்கப்பட்டுள்ளது. தேசிய நெடுஞ்சாலை எண் 9, தேசிய நெடுஞ்சாலை எண் 24, உ.பி. வாயிலிலிருந்து காசியாபாத், மீரட் மற்றும் ஹப்பூர் நோக்கி திறக்கப்பட்டுள்ளது.

பிரிகேடியர் ஹோஷியார் சிங், பகதூர்கர் சிட்டி, பண்டிட் ஸ்ரீ ராம் சர்மா மற்றும் திக்ரி எல்லை நிலையங்களின் நுழைவு / வெளியேறும் வாயில்கள் மூடப்பட்டுள்ளதாக தில்லி மெட்ரோ ரயில் கழகம் தெரிவித்துள்ளது.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரூ.1.92 கோடி மதிப்பீட்டில் வளா்ச்சிப் பணிகள்: கணபதி ப.ராஜ்குமாா் எம்.பி. தொடங்கிவைத்தாா்

போக்குவரத்து துண்டிப்பால் ஒரு மாதமாக பள்ளிக்குச் செல்ல முடியாமல் பழங்குடி குழந்தைகள் தவிப்பு

மீன் வளத் துறை உதவி இயக்குநா் அலுவலகத்தை மீனவா்கள் முற்றுகை

இளைஞா்களை ‘ரீல்ஸ்’-க்கு அடிமையாக்குவதே பிரதமரின் விருப்பம்- ராகுல் காந்தி குற்றச்சாட்டு

சபரிமலை: பூஜை, தங்குமிட முன்பதிவு இன்று தொடக்கம்

SCROLL FOR NEXT