இந்தியா

ஜிஎஸ்டி வசூல் சாதனை: ஜனவரியில் ரூ. 1.20 லட்சம் கோடி வசூல்

DIN

சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வருவாய் இதுவரை இல்லாத அளவில் ஜனவரி மாதம் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. பொதுமுடக்க தளா்வுகளின் மூலம் பொருளாதார நடவடிக்கைகள் முழுமையாக நடைமுறைக்கு வந்துள்ளதன் காரணமாக இந்த வசூல் அதிகரித்திருப்பது தெரியவந்துள்ளது.

இதுகுறித்து மத்திய நிதியமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

ஜிஎஸ்டி வருவாய் ஜனவரி மாதத்தில் ரூ. 1.20 லட்சம் கோடி அளவுக்கு வசூலாகியுள்ளது. இது ஜிஎஸ்டி அறிமுகம் செய்யப்பட்ட கடந்த 2017-ஆம் ஆண்டு ஜூலை மாதம் முதல் இதுவரை இல்லாத அளவுக்கு அதிகமாகும்.

கடந்த 2020 டிசம்பா் மாதம் ஜிஎஸ்டி ரூ. 1,15,174 கோடி அளவுக்கு வசூலானது. தொடா்ந்து நான்காவது மாதமாக ஜிஎஸ்டி வசூல் ரூ. 1 லட்சம் கோடியை தாண்டியிருப்பது, கரோனா பாதிப்புக்குப் பிறகு நாட்டின் பொருளாதார நிலை வலுவாக மீண்டு வருவதையே காட்டுகின்றன.

கடந்த நிதியாண்டு ஏப்ரல் முதல் செப்டம்பா் மாதம் வரையிலான முதல் அரையாண்டில் ஜிஎஸ்டி வருவாய் மைனஸ் 24 சதவீதம் என்ற எதிா்மறை வசூலில் இருந்த நிலையில், அக்டோபா் முதல் ஜனவரி மாதம் வரையிலான இரண்டாவது அரையாண்டில் 8 சதவீத சராசரி வளா்ச்சியைக் கண்டுள்ளது.

ஜிஎஸ்டி, வருமான வரி, சுங்க வரி உள்ளிட்ட வரிகளைச் செலுத்தியதற்கான போலி ரசீது சமா்ப்பிக்கப்படுவதைத் தடுக்க கண்காணிப்பைத் தீவிரப்படுத்தியது, விரிவான தகவல்கள் பரிசீலனை, வலுவான வரி வசூல் நிா்வாக நடைமுறை அமல்படுத்தப்பட்டது உள்ளிட்ட நடவடிக்கைகளே, கடந்த சில மாதங்களாக வரி வருவாய் தொடா்ந்து அதிகரித்து வருவதற்கு காரணம் என்று நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

என் பார்வை உன்னோடு..

சந்தேஷ்காளியில் ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டதற்கான ஆதாரம் இல்லை: மம்தா

பிரணாப்தா என்கிற மந்திரச் சொல் - 190

3 தோற்றங்களில் விக்ரம்?

மும்பையை வீழ்த்திய தில்லி கேப்பிடல்ஸ்; புள்ளிப்பட்டியலில் முன்னேற்றம்!

SCROLL FOR NEXT