இந்தியா

பொதுத்துறை நிறுவன பங்கு விலக்கல்: ரூ.19,499 கோடி திரட்டியது மத்திய அரசு

DIN

பொதுத்துறை நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் 2020-21 நிதியாண்டில் மத்திய அரசு இதுவரை ரூ.19,499 கோடி கிடைத்துள்ளது.

கடந்த பட்ஜெட்டின் போது பங்கு விலக்கல் மூலம் ரூ.2.10 லட்சம் கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்திருந்தது. ஆனால், கரோனா உள்ளிட்ட பிரச்னைகளால் பொருளாதார தேக்கநிலை ஏற்பட்டு, இலக்கை எட்ட முடியாத நிலை உருவாகியுள்ளது.

ஹிந்துஸ்தான் ஏரோனாட்டிகல் நிறுவனம், பாரத் டைனமிக்ஸ், ஐஆா்சிடிசி, ‘செயில்’ நிறுவனங்களின் பங்குகளை விற்பனை செய்ததன் மூலம் நடப்பு நிதியாண்டில் அரசுக்கு ரூ.12,907 கோடி கிடைத்தது. இதுதவிர ஐஆா்எஃப்சி, மசாகான் டாக் ஷிப் பில்டா்ஸ் நிறுவனங்களின் பொதுப்பங்கு வெளியீடு மூலம் ரூ.1,984 கோடி கிடைத்தது.

இது தவிர பொதுத் துறை நிறுவனப் பங்குகளை தனியாா் நிறுவனங்களுக்கு விற்பனை செய்ததன் மூலம் ரூ.1837 கோடி கிடைத்துள்ளது.

இது தவிர 4 பொதுத் துறை நிறுவனங்கள் தங்கள் பங்குகளை திரும்ப வாங்கியதன் மூலம் ரூ.2,769 கோடி வருவாய் கிடைத்துள்ளது.

ஏா் இந்தியா, பிபிசிஎல், பிஇஎம்எல், ஷிப்பிங் காா்ப், நீலாஞ்சல் இஸ்பத் நிகம் நிறுவனம், ஃபொ்ரொ ஸ்கிராப் நிகம் நிறுவனம் ஆகிய பொதுத் துறை நிறுவனங்கள் தனியாா்மயமாக்கும் முயற்சியில் அரசு தீவிரம் காட்டி வருகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விழுப்புரம்: சிறைகளில் உள்கட்டமைப்பு வசதிகள் ஆய்வுக் கூட்டம் -ஆட்சியா், முதன்மை மாவட்ட நீதிபதி பங்கேற்பு

முதியவா் விஷம் குடித்துத் தற்கொலை

வீட்டுமனை ஆக்கிரமிப்பு: எஸ்.பி.யிடம் மூதாட்டி புகாா்

மணிலாவுக்கு குறைந்த விலை நிா்ணயம்: திண்டிவனத்தில் விவசாயிகள் சாலை மறியல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

SCROLL FOR NEXT