முகப்பு
விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன்? ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி
இந்தியா

விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன்? ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் தில்லி எல்லையில் கான்கிரீட் தடுப்புசுவர்களுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட நிலையில் விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:26 PM
விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன்? ராகுல்காந்தி மத்திய அரசுக்கு கேள்வி
பகிர்:

விவசாயிகளின் போராட்டத்தைத் தடுக்கும் வகையில் தில்லி எல்லையில் கான்கிரீட் தடுப்புசுவர்களுடன் கம்பி வேலி அமைக்கப்பட்ட நிலையில் விவசாயிகளை அச்சுறுத்துவது ஏன் என ராகுல்காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் குடியரசு தினத்தன்று நடைபெற்ற டிராக்டர் பேரணியில் வன்முறை ஏற்பட்டது.

இந்நிலையில் தில்லி எல்லை சிங்குவில் சாலைகளில் கான்கிரீட் தடுப்புகளுடன் கம்பிவேலி அமைக்கப்பட்டுள்ளது. தில்லி- ஹரியாணா எல்லையில் தற்காலிக சிமென்ட் சுவா் அமைக்கப்பட்டுள்ளது. ஹாஜிபூரில் பல அடுக்குத் தடுப்புகள் வைக்கப்பட்டுள்ளன. விவசாயிகள் தலைநகருக்குள் நுழைவதைத் தடுக்க மேற்படி பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

இதற்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். 

இந்நிலையில் புதன்கிழமை செய்தியாளர்களை சந்தித்த காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, “தில்லி விவசாயிகளால் சூழப்பட்டுள்ளது. அவர்கள் தான் நமக்கு வாழ்க்கை தருகிறார்கள். தில்லி ஏன் கோட்டை போல் மாற்றப்படுகிறது? எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் அவர், “நாம் ஏன் அவர்களை அச்சுறுத்துகிறோம். அடித்து கொலை செய்கிறோம்? அரசு ஏன் அவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை. இந்த சிக்கலைத் தீர்க்கவில்லை? இந்த பிரச்னை நாட்டுக்கு நல்லதல்ல” என்று தெரிவித்துள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →