விவசாயிகள் தில்லி நோக்கி வருவதைத் தடுப்பதற்காக காஜிப்பூரில் பல அடுக்கு தடுப்புகளை அமைத்துள்ள காவல்துறையினர். 
இந்தியா

விவசாயிகளை சந்திக்கச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தம்

தில்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகளைச் சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

DIN

தில்லி காசிப்பூர் எல்லையில் விவசாயிகளைச் சந்திக்க சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

புதிய வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லைகளில் 70 நாள்களைக் கடந்து விவசாயிகள் போராட்டம் நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக திமுக, விடுதலைச் சிறுத்தைகள் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி எம்.பி.க்கள் காசிப்பூர் எல்லையில் விவசாயிகளை சந்திக்கச் சென்றனர்.

அப்போது காசிப்பூர் முக்கிய எல்லையில் முள்வேலிகள், கான்கிரீட் தடுப்புகள் அமைத்து காவல்துறையினர் அப்பகுதியை முழுவதுமாக அடைத்திருந்தனர். இந்நிலையில் அப்பகுதிக்குச் சென்ற எதிர்க்கட்சி எம்.பி.க்கள் திருச்சி சிவா, கனிமொழி, திருமாவளவன், செல்வராஜ், சு.வெங்கடேசன், ரவிக்குமார், மல்லிகார்ஜுன கார்கே, விவசாயிகளுக்கு ஆதரவாக அமைச்சர் பதவியை ராஜினாமா செய்த ஹர்சிம்ரத் கவுர் ஆகியோர் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளனர்.

ஆனால், விவசாயிகளை நேரடியாக சந்தித்து ஆதரவு தெரிவிக்க வேண்டும் என்பதில் எம்.பி.க்கள் உறுதியாக உள்ளனர். இதையடுத்து அவர்கள் காவல்துறையுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

15 புதிய அரசு பேருந்துகள்! கொடியசைத்து துவக்கி வைத்த முதல்வர் மு.க.ஸ்டாலின் | நெல்லை | DMK

நெல்லை மாவட்டத்துக்கு 3 புதிய அறிவிப்புகளை வெளியிட்ட முதல்வர்!

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

SCROLL FOR NEXT