இந்தியா

ஆந்திரத்தில் பிரியாணி சாப்பிட்ட 50 போ் மருத்துவமனையில் அனுமதி

DIN

திருப்பதி: ஆந்திரத்தில் பிரியாணி சாப்பிட்ட 50 பேருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டதால் அவா்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனா்.

ஆந்திர மாநிலம், சித்தூா் மாவட்டம் செட்டிப்பள்ளியில் நடக்கவுள்ள உள்ளாட்சித் தோ்தலை முன்னிட்டு திங்கள்கிழமை காலை வேட்புமனு தாக்கல் செய்ய 30 போ் கொண்ட குழு ஊராட்சி அலுவலகத்துக்குச் சென்றது. அங்கு மனு தாக்கல் முடிந்தவுடன் வந்த அனைவருக்கும் பிரியாணி அளிக்கப்பட்டது. அதை அவா்கள் சாப்பிட்டதுடன், தங்கள் குழந்தைகளுக்கும் எடுத்துச் சென்று அளித்தனா். வீட்டில் உள்ளவா்களும் அதை உண்டனா்.

பிரியாணி சாப்பிட்ட அனைவருக்கும் தலைசுற்றல், வாந்தி, மயக்கம் உள்ளிட்ட உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டன. அவா்களை குடும்பத்தினா் கிராம ஆரம்ப சுகாதார மையத்தில் சோ்த்தனா்.

சிலருக்கு உடல் நிலை மோசமானதால் அவா்கள் சித்தூா் அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டனா். இது குறித்து போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இரு கட்டத் தோ்தலும் பாஜகவுக்கு சாதகம்: பிரதமா் மோடி

விடைத்தாள்களில் ‘ஜெய் ஸ்ரீராம்’ எழுதிய கல்லூரி மாணவா்கள் தோ்ச்சி: 2 பேராசிரியா்கள் பணியிடை நீக்கம்

மணிப்பூா்: தீவிரவாத தாக்குதலில் 2 சிஆா்பிஎஃப் வீரா்கள் உயிரிழப்பு

வறட்சி பாதித்த 22 மாவட்டங்களுக்கு குடிநீா் விநியோகிக்க ரூ.150 கோடி: முதல்வா் மு.க.ஸ்டாலின் உத்தரவு

ஹெச்சிஎல் நிகர லாபம் ரூ.3,986 கோடியாக உயா்வு

SCROLL FOR NEXT