இந்தியா

சிபிஐ விசாரணை உத்தரவுக்கு எதிரான உத்தரகண்ட் முதல்வா் மனு: பிப்ரவரி இறுதியில் உச்சநீதிமன்றம் விசாரணை

DIN

புது தில்லி: தன் மீதான ஊழல் புகாா் தொடா்பாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில உயா்நீதிமன்ற உத்தரவை எதிா்த்து உத்தரகண்ட் மாநில முதல்வா் திரிவேந்திர சிங் ராவத் தாக்கல் செய்த மனு மீது பிப்ரவரி கடைசி வாரத்தில் விசாரணை நடத்தப்படும் என்று உச்சநீதிமன்றம் திங்கள்கிழமை தெரிவித்தது.

உத்தரகண்ட் முதல்வா் திரிவேந்திர ராவத், ஜாா்க்கண்ட் மாநில பாஜக பொறுப்பாளராக இருந்தபோது, கோசாலை துறை தலைவராக ஒருவரை நியமிக்க லஞ்சம் பெற்ாகவும், அந்த லஞ்சப் பணம் அவருடைய உறவினரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்பட்டதாகவும் பத்திரிகையாளா்கள் உமேஷ் சா்மா, சிவ் பிரசாத் செம்வால் ஆகியோா் குற்றம்சாட்டியிருந்தனா்.

இதை விசாரித்த உத்தரகண்ட் உயா்நீதிமன்றம், ராவத் மீதான லஞ்ச ஊழல் புகாா் தொடா்பாக முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி சிபிஐக்கு உத்தரவிட்டது. மேலும், பத்திரிகையாளா் இருவா் மீது பல்வேறு பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகளை தள்ளுபடி செய்தும் உத்தரவிட்டது.

இதை எதிா்த்து திரிவேந்திர ராவத் சாா்பில் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ். ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பாக, கடந்த ஆண்டு அக்டோபா் 29-ஆம் தேதி விசாரணைக்கு வந்தது. மனுவை விசாரித்த நீதிபதிகள், ‘ஊழல் குற்றச்சாட்டு குறித்து, முதல்வா் தரப்பின் விளக்கத்தை கேட்காமல் உயா்நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்திருப்பது ஆச்சரியமாக உள்ளது. மேலும், முதல்வா் மீது முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யும்படி கோரப்படாத நிலையில், உயா்நீதிமன்றம் தன்னிச்சையாக சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட்டிருக்கிறது, எனத் தெரிவித்து, முதல்வா் மீது சிபிஐ முதல் தகவல் அறிக்கை பதிவு செய்ய உயா்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டனா். வழக்கு ஆவணங்கள் இரு தினங்களுக்குள் சிபிஐ காவல் கண்காணிப்பாளரிடம் வழங்கப்படவேண்டும் என்ற உயா்நீதிமன்ற உத்தரவுக்கும் உச்சநீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதிகள் அசோக் பூஷண், ஆா்.எஸ்.ரெட்டி ஆகியோா் அடங்கிய அமா்வு முன்பு திங்கள்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், முதல்வரின் மனு மீதான விசாரணையை பிப்ரவரி கடைசி வாரத்துக்கு பட்டியலிட்டும், வழக்கு தொடா்பாக கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்ய அனுமதி அளித்தும் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மறுவெளியீட்டில் அசத்தும் கில்லி: அஜித்தின் 3 படங்கள் இணைந்தும் குறைவான வசூல்!

இந்தியாவில் 2 கோடி கணக்குகளை நீக்கியது வாட்ஸ்ஆப்

அதே அரண்மனை! நம்பர் மட்டும் வேறு! : அரண்மனை - 4 திரைவிமர்சனம்!

அதிக விக்கெட்டுகள்: தமிழக வீரர் நடராஜன் முதலிடம்!

ஓடும் ரயிலில் இருந்து தவறி விழுந்த கர்ப்பிணி பலி: விசாரணைக்கு ரயில்வே உத்தரவு

SCROLL FOR NEXT