முகப்பு
இந்தியா

தெலங்கானா அரசியலில் கால்பதிக்கும் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி?

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

Updated On : 9 பிப்ரவரி, 2021 at 1:09 PM
ஜெகன் மோகன் ரெட்டியுடன் ஷர்மிளா
பகிர்:

ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா புதிய அரசியல் கட்சியை தொடங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. 

ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சியின் தலைவரும், ஆந்திர மாநில முதல்வருமான ஜெகன் மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா. இவர் புதிய அரசியல் கட்சி ஒன்றைத் தொடங்கி அரசியலுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. 

ஆனால், அவர் தெலங்கானா அரசியலில் கால்பதிக்கப் போவதாகவும், தெலங்கானாவில் 2023 ஆம் ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தலுக்கு முன்னதாக கட்சி தொடங்கி தேர்தலில் போட்டியிட முடிவு செய்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. 

Advertisement

இந்த விவகாரம் குறித்து ஷர்மிளா, தனது தந்தை ஒய்.எஸ். ராஜசேகர் ரெட்டிக்கு நெருக்கமானவர்களிடம் செவ்வாய்க்கிழமை ஹைதராபாத்தில் உள்ள தனது இல்லத்தில் ஆலோசனை மேற்கொள்ளவிருக்கிறார். 

2018 சட்டப்பேரவைத் தேர்தலில், தெலங்கானா ராஷ்டிர சமிதி 88 இடங்களைப் பெற்று ஆட்சி அமைத்தது. காங்கிரஸ் 19 இடங்களையும், அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் கட்சி ஏழு இடங்களையும் பாஜக ஒரு இடத்தையும் கைப்பற்றியது குறிப்பிடத்தக்கது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.