வாரத்தில் 4 நாள்கள் வேலை; 3 நாள்கள் விடுமுறை: மத்திய அரசு பரிசீலனை
வாரத்தில் 4 நாள்கள் வேலை, மூன்று நாள்கள் வார விடுமுறை என்ற புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், வாரத்தில் 48 நாள்கள் பணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்
வாரத்தில் 4 நாள்கள் வேலை, மூன்று நாள்கள் வார விடுமுறை என்ற புதிய முறையை கொண்டு வர மத்திய அரசு பரிசீலித்து வருகிறது. ஆனால், வாரத்தில் 48 நாள்கள் பணி நேரம் என்பதில் எந்த மாற்றமும் இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய அரசின் தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்புத்துறை சார்பில், தொழிலாளர் விதிகளில் பல மாற்றங்களை ஏற்படுத்த திட்டமிட்டுள்ளது.
அதற்கான விரைவு விதிமுறைகள் தயாரிக்கும் பணி நிறைவு பெற்றதும், பொதுமக்களிடம் கருத்துக் கேட்க இணையதளத்தில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
தொழிலாளர்களின் விருப்பத்தின் பேரில், ஒரு நிறுவனம், நாள் ஒன்றுக்கு 12 மணி நேர வேலை நேரம் என்ற வகையில் வாரத்தில் நான்கு நாள்கள் பணி நாள் என்றும், மூன்று வார விடுமுறை நாள்கள் என்றும் அறிவிக்கலாம். இது அந்தந்த நிறுவனம் மற்றும் தொழிலாளர்களின் விருப்பத்தைப் பொருத்தது. இது ஒவ்வொரு நிறுவனத்தின் பணிச் சூழலைப் பொருத்து மாற்றியமைத்துக் கொள்ளலாம். சில மாற்றங்களை ஏற்படுத்த நாங்கள் முயல்கிறோம், வார பணி நாள்களில் தேவைக்கேற்ப மாற்றங்களை ஏற்படுத்திக் கொள்ளும் வகையில் தளர்வுகளை ஏற்படுத்த முயற்சிப்பதாக தொழிலாளர் மற்றும் வேலை வாய்ப்பு அமைச்சகச் செயலாளர் அபூர்வா சந்திரா தெரிவித்துள்ளார்.
தற்போது, வாரத்தில் 48 நாள்கள் பணி நேரம் மற்றும் நாள் ஒன்றுக்கு 8 மணி நேரத்துக்கு மிகாமல் பணி நேரம் அமைக்கும் வகையில் விதிமுறைகள் அமலில் உள்ளன.
மேலும், இந்த விதிமுறை மாற்றங்களில், தொழிலாளர் ஈட்டுறுதி காப்பீட்டு (இஎஸ்ஐசி) சேவை மூலம், தொழிலாளர்களுக்கு இலவச மருத்துவ பரிசோதனை மேற்கொள்ளும் திட்டமும் அமலுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.