இந்தியா

சாத்தூர் பட்டாசு ஆலை விபத்தில் பலியானோர் குடும்பத்துக்கு ரூ.2 லட்சம் நிவாரணம்: பிரதமர் அறிவிப்பு

DIN

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தோர் குடும்பங்களுக்கு பிரதமர் தேசிய நிவாரண நிதியிலிருந்து தலா ரூ.2 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார்.

மேலும், விபத்தில் படுகாயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கவும் பிரதமர் உத்தரவிட்டுள்ளார். சாத்தூர் பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழப்பு நேரிட்டது மிகுந்த வேதனையை அளிக்கிறது. காயமடைந்தவர்கள் விரைவாக குணமடைய வேண்டுகிறேன் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் ஏழாயிரம்பண்ணையைச் சேர்ந்தவருக்கு சொந்தமான பட்டாசு தொழிற்சாலையில் இன்று மதியம் வெடி விபத்து ஏற்பட்டது. 

வெடி விபத்தில் அச்சங்குளம் ஏழாயிரம்பண்ணை, அன்பின் நகரம் பகுதிகளைச் சேர்ந்த 6 பேர் பலியாகினர். பத்துக்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

சாத்தூர், வெம்பக்கோட்டை, சிவகாசி உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து மீட்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். ஏழாயிரம்பண்ணை காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வேட்புமனு தாக்கல் செய்தார் மனோகர் லால் கட்டர்!

பஞ்சாபில் தமிழ் வம்சாவளி சீக்கியர் போட்டி!

பிளஸ் 2 தேர்வு: தலா 478 மதிப்பெண்கள் பெற்ற இரட்டையர்கள்

பிரியமான தோழி சீரியல் நிறைவு: புதிய நேரத்தில் ஒளிபரப்பாகும் பிரபல தொடர்கள்!

நாகர்கோவில் அருகே கடல் அலையில் சிக்கி 5 பயிற்சி மருத்துவர்கள் பலி!

SCROLL FOR NEXT