முகப்பு
இந்தியா

கேரளத்தில் மேலும் 5,471 பேருக்கு கரோனா தொற்று

கேரளத்தில் புதிதாக 5,471 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் புதிதாக 5,471 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது சனிக்கிழமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதன்மூலம் கேரளத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 999524ஆக அதிகரித்துள்ளது. மேலும் 5,835 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 16 பேர் பலியாகியுள்ளனர்.

இதைத் தொடர்ந்து, 9,31,706 பேர் குணமடைந்துள்ளனர். 3,970 பேர் பலியாகியுள்ளனர். தற்போதைய நிலவரப்படி கரோனா தொற்று பாதிப்புக்கு 63,581 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

கடந்த 24 மணிநேரத்தில் 85,969 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. 

முழு கட்டுரையைப் படிக்க →