முகப்பு
இந்தியா

உபியில் பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு

கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:31 PM
உபியில் பிப்.15 முதல் கல்லூரிகள், பல்கலைக்கழகங்கள் திறப்பு (கோப்புப்படம்)
பகிர்:

கரோனா பாதுகாப்பு வழிகாட்டு நெறிமுறைகளுடன் உத்தரப்பிரதேச மாநிலத்தில் பிப்ரவரி 15ஆம் தேதி முதல் கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்கள் மீண்டும் திறக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது.

கரோனா தொற்று காரணமாக மகாராஷ்டிரத்தில் கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. இந்நிலையில் தொற்று பரவல் கட்டுக்குள் வந்ததைத் தொடர்ந்து உத்தரப்பிரதேசத்தில் கல்வி நிலையங்கள் திறக்கப்படுவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

கடந்த 2020 நவம்பர் முதல் குறைந்த எண்ணிக்கையிலான மாணவர்களுடன் இயங்கி வந்த கல்வி நிலையங்கள் பிப்ரவரி 15 முதல் வழக்கமான மாணவர்கள் எண்ணிக்கையுடன் இயங்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கல்வி நிலையங்கள் திறப்பின்போது கரோனா தொற்று பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும் என கல்லூரி முதல்வர்கள் மற்றும் பல்கலைக்கழக துணை வேந்தர்களை மாநில அரசு அறிவுறுத்தியுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.