முகப்பு
இந்தியா

பொதுக்கூட்ட மேடையில் மயங்கி விழுந்த குஜராத் முதல்வர்

பொதுக்கூட்ட மேடையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:32 PM
பகிர்:

பொதுக்கூட்ட மேடையில் குஜராத் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்டுத்தியுள்ளது. 
குஜராத்தில் விரைவில் உள்ளாட்சித் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் வதோதராவின் நிஜம்புரா பகுதியில் நடைபெற்ற பிரசாரப் பொதுக்கூட்டத்தில் அம்மாநில முதல்வர் விஜய் ரூபானி நேற்று பங்கேற்றார். 
நிகழ்ச்சியில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கிய அவர் தொடர்ந்து உரை நிகழ்த்தினார். அப்போது திடீரென மேடையிலேயே அவர் மயங்கி விழுந்தார். ஆனால் முதல்வரின் அருகில் இருந்த பாதுகாவலர்கள் அவரை தாங்கிப் பிடித்தனர். தொடர்ந்து முதல்வருக்கு மேடையில் முதலுதவி அளிக்கப்பட்டது. 
பின்னர் ஆமதாபாத்தில் உள்ள மருத்துவமனையில் அவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். இதனிடையே முதல்வர் விஜய் ரூபானியை தொலைப்பேசியில் தொடர்புகொண்டு பிரதமர் மோடி நலம் விசாரித்தார். 
பொதுக்கூட்ட மேடையில் முதல்வர் விஜய் ரூபானி மயங்கி விழுந்த சம்பவம் குஜராத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.