முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீர்: சிஆர்பிஎஃப் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

Updated On : 16 பிப்ரவரி, 2021 at 12:59 PM
கோப்புப்படம்
பகிர்:

ஸ்ரீநகர்: ஜம்மு-காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் செவ்வாய்க்கிழமை பாதுகாப்புப் படையினரின் வாகனத்தைக் குறிவைத்து தீவிரவாதிகள் குண்டுவெடிப்பு சம்பவம் நிகழ்த்தியுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்தனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்த்நாக் மாவட்டத்தில் பிஜ்பெஹாராவின் பசல்போரா பகுதியில் மத்திய ரிசர்வ் போலீஸ் படை (சிஆர்பிஎஃப்) வாகனத்தைத் தீவிரவாதிகள் குறிவைத்ததாக காவல்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

இந்த குண்டுவெடிப்பால் பொதுமக்கள் சிலரது வாகனங்களைச் சேதப்படுத்தியது. ஆனால் உயிர்ச் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று அவர் கூறினார்.

Advertisement

குண்டுவெடிப்புக்குப் பின்னர் பாதுகாப்புப் படையினர் அந்த பகுதியைச் சுற்றி வளைத்து, தாக்குதல் நடத்தியவர்களைக் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.