முகப்பு
இந்தியா

இந்தியா, மொரீசியஸ் இடையே ஒப்பந்தம்: மத்திய அமைச்சரவை ஒப்புதல்

​இந்தியா, மொரீசியஸ் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
கோப்புப்படம்
பகிர்:


இந்தியா, மொரீசியஸ் இடையே விரிவான பொருளாதார ஒருங்கிணைப்பு மற்றும் கூட்டணி ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

தில்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரவைக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் இந்தியா, மொரீசியஸ் இடையிலான பொருளாதார ஒப்பந்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

இது தவிர, குழந்தைகள் பாதுகாப்பு அமைப்பு முறையை வலுப்படுத்துவதற்காக குழந்தைகள் பாதுகாப்புச் சட்டத்தில் திருத்தம் மேற்கொள்வதற்காக பெண்கள் மற்றும் குழந்தைகள் நல அமைச்சகம் கொண்டுவந்துள்ள முன்மொழிவுக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

முழு கட்டுரையைப் படிக்க →