முகப்பு
இந்தியா

ம.பி. பேருந்து விபத்து: முதல்வர் நேரில் ஆறுதல்

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
முதல்வர் சிவராஜ் சிங் செளகான் (கோப்புப்படம்)
பகிர்:

மத்தியப் பிரதேசத்தில் பேருந்து கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இறந்தவர்களின் குடும்பத்திற்கு முதல்வர் சிவராஜ் சிங் செளகான் நேரில் சென்று ஆறுதல் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம், ஸித்தி மாவட்டத்தில் ஏற்பட்ட பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50-ஆக அதிகரித்துள்ளது.

நேற்று வரை 47 பேர் உயிரிழந்த நிலையில், இன்று 3 பேரில் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. 

இந்நிலையில் பேருந்து விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை முதல்வர் சிவராஜ் சிங் செளகான் இன்று (பிப்.17) நேரில் சென்று சந்தித்தார்.

விபத்தில் குடும்ப உறுப்பினர்களை இழந்து தவிக்கும் அவர்களுக்கு முதல்வர் செளகான் ஆறுதல் கூறினார்.

மத்தியப் பிரதேச மாநிலம் ஸித்தி மாவட்டத்திலிருந்து சத்னாவுக்கும் சென்று கொண்டிருந்த பேருந்து, பாட்னா கிராமம் அருகே செவ்வாய்க்கிழமை (பிப்.16) காலை ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து பேருந்து கால்வாயில் விழுந்து விபத்துக்குள்ளானது.

முழு கட்டுரையைப் படிக்க →