முகப்பு
அமைதியான முறையில் ரயில் மறியல் நடைபெறும்: விவசாய சங்கம்
இந்தியா

அமைதியான முறையில் ரயில் மறியல் போராட்டம்: விவசாய சங்கம்

நாடு முழுவதும் அமைதியான முறையில் இன்று (பிப்.18) ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:33 PM
அமைதியான முறையில் ரயில் மறியல் நடைபெறும்: விவசாய சங்கம்
பகிர்:

நாடு முழுவதும் அமைதியான முறையில் இன்று (பிப்.18) ரயில் மறியல் போராட்டம் நடைபெறும் என்று பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் ராகேஷ் திகத் தெரிவித்துள்ளார்.

புதிய வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெற வலியுறுத்தி நாடு முழுவதும் வியாழக்கிழமை (பிப்.18) நண்பகல் 12 மணி முதல் மாலை 4 மணி வரை ரயில் மறியல் போராட்டம் நடத்தப்படும் என விவசாய சங்கங்களை ஒருங்கிணைத்து வழிநடத்தும் சம்யுக்த கிசான் மோர்ச்சா (எஸ்கேஎம்) அமைப்பு கடந்த வாரம் அறிவித்தது.

அதன்படி இன்று பிற்பகல் 12 மணிக்கு விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடவுள்ளனர்.

இதற்காக முக்கியமான ரயில் நிலையங்களில் கூடுதலாக 20 ஆயிரம் ரயில்வே பாதுகாப்பு சிறப்புப் படையினர் அனுப்பிவைக்கப்பட்டுள்ளனர்.

பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேசம், மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் ரயில்வே பாதுகாப்புப் படையினர் கூடுதல் கவனம் செலுத்த அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது தொடர்பாக பேசிய பாரதிய கிஷான் யூனியன் அமைப்பின் ராகேஷ் திகத், நண்பகல் 12 மணி முதல், மாலை 4 மணி வரை மறியல் போராட்டம் நடைபெறவுள்ளது. ரயில்கள் இயங்குவது நிறுத்தப்படும். ஆனால் அமைதியான முறையில் போராட்டம் நடைபெறும். போராட்டத்தின்போது மக்களுக்கு குடிநீர், பால், லஸ்ஸி, பழங்கள், போன்றவை வழங்கப்படும்.

விவசாயிகள் சந்திக்கும் பிரச்னைகள் குறித்து மக்களுக்கு எடுத்துரைக்கப்படும். விவசாயிகளின் விளை பொருள்களை குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு விற்கமுடியவில்லை என்று கூறினார்.

முழு கட்டுரையைப் படிக்க →