முகப்பு
இந்தியா

கேரளத்தில் இன்று மேலும் 4,070 பேருக்கு கரோனா

கேரளத்தில் இன்று மேலும் 4,070 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
கோப்புப்படம்
பகிர்:

கேரளத்தில் இன்று மேலும் 4,070 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. 
இதுகுறித்து அம்மாநில சுகாதாரத்துறை வெளியிட்ட தகவலில், மாநிலத்தில் இன்று 57,241 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன. அவற்றில் புதிதாக 4,070 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 
தற்போதைய நிலவரப்படி 58,313 பேர் சிகிச்சையில் உள்ளனர். கரோனாலிருந்து இன்று 4,345 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 9,71,975 பேர் குணமடைந்து வீடு திரும்பிள்ளனர். அதேசமயம் கரோனாவுக்கு இன்று மேலும் 15 பேர் பலியானார்கள். 
இதையடுத்து மொத்த பலி எண்ணிக்கை 4,089ஆக உயர்ந்துள்ளது. 2,37,660 பேர் கண்காணிப்பில் உள்ளனர். கட்டுப்படுத்தப்பட்ட பகுதிகளாக 372 பகுதிகள் உள்ளன. இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments