முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் தொடர்ந்து அதிகரிக்கும் கரோனா: ஒரே நாளில் 6,971 பேர் பாதிப்பு

மகராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,971 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:35 PM
கோப்புப்படம்
பகிர்:

மகராஷ்டிரத்தில் ஒரேநாளில் 6,971 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மகாராஷ்டிரத்தில் கடந்த ஒரு வாரமாக கரோனா பாதிப்பு மீண்டும் அதிகரித்து வருகிறது. இதனால் புணே உள்ளிட்ட பகுதிகளை மீண்டும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. மகராஷ்டிர மாநிலத்தில் இன்று ஒரேநாளில் 6,971 பேருக்கு கரோனா தொற்று உறுதி கணிடறிப்பட்டுள்ளது. 
இதையடுத்து மொத்த பாதிப்பு எண்ணிக்கை 21,00,884ஆக உயர்ந்துள்ளது. கரோனாவுக்கு இன்று மேலும் 35 பேர் பலியாகியுள்ளனர். 
இதன்மூலம் மொத்த பலி எண்ணிக்கை 51,788ஆக உயர்ந்துள்ளது. தற்போது 52,956 பேர் கரோனாவுக்கான சிகிச்சையில் உள்ளனர். கரோனா பாதிப்பில் இருந்து இன்று 2,417 பேர் குணமடைந்தனர். 
இதுவரை 19,94,947 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். மாநிலத்தில் 2,42,563 பேர் வீட்டுக்கண்காணிப்பில் உள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments