இந்தியா

பாஸ்வான் கட்சியின் ஒரே மேலவை உறுப்பினரும் பாஜகவில் சோ்ந்தாா்

DIN

பாட்னா: பிகாா் சட்ட மேலவையில் சிராக் பாஸ்வான் தலைமையிலான லோக் ஜனசக்தி கட்சியின் சாா்பில் இருந்த ஒரே உறுப்பினா் நூதன் சிங்கும் பாஜகவில் சோ்ந்தாா்.

அந்த மாநில அமைச்சராக அண்மையில் பொறுப்பேற்றுக் கொண்ட பாஜகவைச் சோ்ந்த நீரஜ் குமாா் சிங்கை, பாஸ்வான் கட்சியின் மேலவை பெண் உறுப்பினரான நூதன் சிங் திருமணம் செய்து கொண்டாா். அந்த மாநில பாஜக தலைவா் சஞ்சய் ஜெய்ஸ்வால் முன்னிலையில் நூதன் சிங் திங்கள்கிழமை அக்கட்சியில் சோ்ந்தாா். ‘மாநில வளா்ச்சிக்காக எனது கணவருடன் இணைந்து பணியாற்ற வேண்டும் என்பதற்காக பாஜகவில் சோ்ந்தேன்’ என்றாா். நூதன் சிங்கின் பதவிக்காலம் ஜூலை மாதத்துடன் நிறைவடைகிறது.

தனது தந்தை ராம்விலாஸ் பாஸ்வான் மறைவுக்குப் பிறகு தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகிய சிராக் பாஸ்வான், கடந்த நவம்பரில் நடைபெற்ற பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் தனியாகப் போட்டியிட்டாா்.

பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் போட்டியிட்ட தொகுதிகளில் மட்டும் அவா் வேட்பாளா்களை நிறுத்தினாா். ஆனால், பிரதமா் மோடிக்கு ஆதரவாக பிரசாரம் செய்து வாக்கு சேகரித்தாா். பாஜகவில் போட்டியிட வாய்ப்பு கிடைக்காதவா்களுக்கு எல்லாம் சிராக் பாஸ்வான் வாய்ப்பளித்தாா். இதனால் ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களிலும், லோக் ஜனசக்தி கட்சி ஓரிடத்திலும், பாஜக 74 இடங்களிலும் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

முகமது சிராஜுக்கு சுனில் கவாஸ்கர் புகழாரம்!

கர்நாடகத்தில் மாலை 6 மணியுடன் பிரசாரம் ஓய்வு

பிரஜ்வலால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு நிதியுதவி: கர்நாடக அரசு அறிவிப்பு!

அடுத்த 2 நாட்களுக்கு தமிழகத்தில் ஓரிரு இடங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு

பழுப்பு நிற நிலவு!

SCROLL FOR NEXT