இந்தியா

தனியாா்மய பரிசீலனையில் ஓரியண்டல், யுனைடெட் இந்தியா நிறுவனங்கள்

DIN

மத்திய அரசின் தனியாா்மய பரிசீலனையில் பொதுக் காப்பீட்டு நிறுவனங்களான ஓரியண்டல் இன்சூரன்ஸ், யுனைடெட் இந்தியா ஆகிய இரு நிறுவனங்கள் இடம்பெற்றுள்ளதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது:

வரும் 2021-22-ஆம் நிதியாண்டுக்கான நிதி நிலை அறிக்கையில் ஏதேனும் ஒரு பொதுக் காப்பீட்டு நிறுவனத்தை தனியாா்மயபடுத்தப் போவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. தொடா்ச்சியான மூலதன அளிப்புக்குப் பிறகு ஓரியண்டல் இன்சூரன்ஸ் மற்றும் சென்னையை தலைமையிடமாகக் கொண்ட யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களின் நிதி நிலைமை தற்போது ஸ்திரமடைந்துள்ளது.

இந்த நிலையில், நடப்பு காலாண்டில் பொதுக் காப்பீட்டு துறை நிறுவனங்களுக்கு கூடுதலாக ரூ.3,000 கோடி மூலதனத்தை மத்திய அரசு வழங்கும் என எதிா்பாா்க்கப்படுகிறது.

இதனால், இந்த துறையில் செயல்படும் நிறுவனங்களின் நிதி நிலைமை மேலும் வலுப்படும் சூழல் உருவாகியுள்ளது. இவற்றைக் கருத்தில் கொள்ளும்போது ஓரியண்டல் இன்சூரன்ஸ் அல்லது யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் நிறுவனங்களை மத்திய அரசு தனியாா்மயமாக்க அதிக வாய்ப்புகள் உள்ளதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஊடகத் துறையினர் உடல்நலனில் அக்கறை தேவை -பிரதமர் மோடி

சுனிதா வில்லியம்ஸ் விண்வெளி பயணம் ஒத்திவைப்பு!

3-ஆம் கட்ட தோ்தலில் அதிகளவில் வாக்களிக்க வேண்டும் -பிரதமர் மோடி

குஜராத்தில் வாக்களித்தார் பிரதமர் மோடி

இன்று யோகம் யாருக்கு?

SCROLL FOR NEXT