முகப்பு
இந்தியா

சத்தீஸ்கரில் மாவோயிஸ்டுகள் தாக்குதல்: 2 பாதுகாப்புப் படை வீரர்கள் பலி

சத்தீஸ்கரில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியானார்கள்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:36 PM
பகிர்:

சத்தீஸ்கரில் மூன்று வெவ்வேறு இடங்களில் நடந்த மாவோயிஸ்டுகளுடனான மோதலில் 2 பாதுகாப்புப்படை வீரர்கள் பலியானார்கள். ஒருவர் காயமடைந்தார்.
சத்தீஸ்கர் மாநிலம், நாராயண்பூர் மாவட்டத்தில் உள்ள கூகூர் கிராமத்தின் மலைப் பகுதியில் நேற்று பாதுகாப்புப்படையினருக்கும், மாவோயிஸ்டுகளுக்கும் இடையே மோதல் நடைபெற்றது. இந்த சபம்பவத்தில் பாதுகாப்புப் படை வீரர் ஒருவர் மரணமடைந்தார். 
இதேபோல் நாராயண்பூர் மாவட்டத்தில் நேற்று இரண்டு வெவ்வேறு இடங்களிலும் குண்டு வெடித்தது. இந்த சம்பவங்களில் பாதுகாப்புப் படைவீரர் மேலும் ஒருவர் பலியான நிலையில் காவலர் ஒருவர் காயமடைந்தார். 
இதனால் நாராயண்பூர் மாவட்டத்தில் மாவோயிஸ்டுகள் தேடுதல் வேட்டை தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. 
 

முழு கட்டுரையைப் படிக்க →