இந்தியா

ஹரியாணாவில் விரைவில் ‘லவ் ஜிகாத்’ மசோதா தாக்கல் செய்யப்படும்: மாநில உள்துறை அமைச்சர்

ஹரியாணா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் லவ் ஜிகாத் மசோதா தாக்கல் செய்யப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

DIN

ஹரியாணா மாநிலத்தில் பட்ஜெட் கூட்டத்தொடரில் லவ் ஜிகாத் மசோதா தாக்கல் செய்யப்படும் என மாநில உள்துறை அமைச்சர் அனில் விஜ் தெரிவித்துள்ளார்.

திருமணத்தின் மூலம் மதமாற்றத்தில் ஈடுபடுபவர்களைத் தண்டிப்பதற்காக லவ் ஜிகாத் எனும் சட்டத்தை நிறைவேற்ற பாஜக ஆளும் மாநில அரசுகள் தீவிரம் காட்டி வருகின்றன. 

இந்நிலையில் ஹரியாணா மாநிலத்தில் லவ் ஜிகாத் சட்டம் விரைவில் நிறைவேற்றப்படும் என மாநில உள்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார். வெள்ளிக்கிழமை பேசிய அமைச்சர் அனில் விஜ்,  “நடைபெற உள்ள பட்ஜெட் கூட்டத்தொடரில் லவ் ஜிகாத் மசோதா தாக்கல் செய்யப்பட உள்ளது. அதற்கான வரைவு தயாரிக்கும்பணி நடைபெற்று வருகிறது” எனத் தெரிவித்தார்.

உத்தரப்பிரதேசம் மற்றும் மத்தியப் பிரதேசம் ஆகிய பாஜக ஆளும் இரண்டு மாநிலங்கள் ஏற்கெனவே இதேபோன்ற சட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

‘திருவள்ளுவா் தினத்தில் இறைச்சி விற்றால் நடவடிக்கை’

விளாப்பாக்கம் பேரூராட்சியில் பொங்கல் விழா

15.1.1976: ஸ்ரீலங்காவிலிருந்து சென்ற ஆண்டு 18,500 பேர் வருகை

வேளாண் பல்கலை.யில் மசாலா பொடி தயாரிப்பு பயிற்சி

ஜேடா்பாளையத்தில் அரசா் அல்லாள இளைய நாயக்கா் பிறந்த நாள் விழா ஏற்பாடுகள் தீவிரம்

SCROLL FOR NEXT