முகப்பு
இந்தியா

பாஜகவில் இணைந்தார் ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன்

‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இன்று முறைப்படி இணைந்தார்.

இந்தியா

பாஜகவில் இணைந்தார் ‘மெட்ரோமேன்’ ஸ்ரீதரன்

‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இன்று முறைப்படி இணைந்தார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இன்று முறைப்படி இணைந்தார்.
இந்தியாவில் முதன் முதலில் மெட்ரோ ரயில் தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தியதற்காக ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படுபவர் இ.ஸ்ரீதரன். இவர் தான் பாஜகவில் இணைய உள்ளதாகவும், கட்சி வாய்ப்பளித்தால் வரும் கேரள சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிடவுள்ளதாகவும் கடந்த 18ஆம் தேதி தெரிவித்தார். இதனை பாஜக தரப்பிலும் உறுதி செய்யப்பட்டது. 
இந்த நிலையில் ‘மெட்ரோமேன்’ என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இன்று முறைப்படி இணைந்தார். கேரள மாநிலம் மலப்புரத்தில் பாஜக மாநிலத் தலைவர் சுரேந்திரன் தலைமையில் நடைபெற்ற விஜய் யாத்ராவில் மத்திய அமைச்சர் ஆர்கே சிங் முன்னிலையில் அவர் பாஜகவில் இணைந்தார். இத்தகவலை பாஜக தேசிய பொதுச்செயலர் சந்தோஷ் தனது சுட்டுரை தளத்தில் வெளியிட்டுள்ளார். 
கேரள மாநிலத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்கவிருக்கும் நிலையில் மெட்ரோமேன் என்று அழைக்கப்படும் இ.ஸ்ரீதரன் பாஜகவில் இணைந்திருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. 

முழு கட்டுரையைப் படிக்க →