முகப்பு
இந்தியா

புதுச்சேரி: ஏப்.6-ல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:37 PM
பகிர்:

புதுச்சேரியில் ஏப்ரல் 6-ம் தேதி ஒரே கட்டமாக சட்டப் பேரவைத் தேர்தல் நடைபெறும் என்று தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா தெரிவித்துள்ளார்.

தில்லியில் சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்து அறிவித்த அவர், புதுச்சேரியில் 30 தொகுதிகளுக்கும் ஒரேகட்டமாக ஏப்ரல் 6-ம் தேதி தேர்தல் நடைபெறும் என்று அறிவித்தார். 
 

புதுச்சேரியில் வேட்பு மனுக்கள் தாக்கல் மார்ச் 12ஆம் தேதி தொடங்கும்.

வேட்பு மனு தாக்கல் செய்ய மார்ச் 19 கடைசி நாள். 

வேட்பு மனுக்கள் மீதான பரிசீலனை மார்ச் 20-ஆம் தேதி நடைபெறும்.

வேட்பு மனுவை திரும்பப் பெற மார்ச் 22 கடைசி நாள்.

ஏப்ரல் 6-ஆம் தேதி தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெறும்.

மே 2-ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.