தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தன: தேர்தல் ஆணையம்
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
புது தில்லி: சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததாக தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.
தமிழகம், புதுச்சேரி, கேரளம் உள்பட ஐந்து மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தேதி அறிவிப்பு வெளியாகிறது. புது தில்லியில் தலைமைத் தேர்தல் ஆணையர் சுநீல் அரோரா செய்தியாளர்களை சந்தித்து வருகிறார்.
தமிழகம், புதுச்சேரி, கேரளம், மேற்குவங்கம், அசாம் ஆகிய ஐந்து மாநிலங்களில் நடைபெற உள்ள சட்டப்பேரவைத் தேர்தல் தேதி குறித்த அட்டவணையை அவர் வெளியிட உள்ளார்.
செய்தியாளர்கள் கூட்டத்தில் சுநீல் அரோரா பேசுகையில், கரோனா அச்சுறுத்தல் இருந்தாலும், சுகாதாரத்துறையினர் மூலம் அதனை எதிர்கொண்டு வருகிறோம். தேர்தல் பணியில், மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட முன்களப் பணியாளர்களின் பணி பெரும் பங்கு வகிக்கும்.
சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெறவிருக்கும் தமிழகம் உள்பட 5 மாநிலங்களில் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்தது என்று தெரிவித்தார்.