இந்தியா

அசாமில் பள்ளிகள் திறப்பு: மாணவர்கள் வருகை குறைவு

DIN

அசாம் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களுக்குப் பிறகு பள்ளிகள் இன்று (ஜன.1) திறக்கப்பட்டுள்ள நிலையில் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் மாணவர்கள் வருகை குறைந்ததால் வகுப்புகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

கடந்த 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கரோனா தொற்று பரவலால் பள்ளிகள், கல்லூரிகள் உள்பட கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. அதனைத் தொடர்ந்து மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் அசாம் மாநிலத்தில் ஜனவரி 1-ஆம் தேதி முதல் பள்ளிகள், பி.யூ.கல்லூரிகள் இன்று திறக்கப்பட்டுள்ளன. 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வகுப்புகளும் தொடங்கியுள்ளன.

6,7,8,9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வெளிப்புறக் கல்வித் திட்டத்தின் (வித்யாகமா) மூலம் கல்வி பயில ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பள்ளிகள் திறக்கப்பட்டாலும் மாணவர்களின் வருகை குறைவாக இருப்பதால் வகுப்புகள் நடக்காமல் இருந்தது. இதன் காரணமாக வகுப்பறைகள் வெறிச்சோடிக் காணப்பட்டன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாலியில் நிவேதிதா சதீஷ்!

இங்கு வெயில்தான்.. ஜோனிடா!

நாளை பிளஸ் 2 தேர்வு முடிவுகள்!

அரசுக் கல்லூரிகளில் நாளை முதல் விண்ணப்பம்

ஊபரில் பயணிப்பவரா நீங்கள்.. நிறுவனம் விடுத்த எச்சரிக்கை!

SCROLL FOR NEXT