இந்தியா

இலங்கையில் மாகாண ஒழிப்பை மத்திய அரசு ஏற்கவில்லை: திமுகவுக்கு கே.பி.ராமலிங்கம் விளக்கம்

DIN

இலங்கையில் மாகாண ஒழிப்பு விஷயத்தை மத்திய அரசு இதுவரை ஏற்கவுமில்லை. வரவேற்கவும் இல்லை என்று முன்னாள் எம்.பி.,யும், பாஜக பிரமுகருமான கே.பி.ராமலிங்கம் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து, வெள்ளிக்கிழமை அவா் வெளியிட்ட அறிக்கை:

இலங்கைத் தமிழா் பிரச்னையில் 2010-ஆம் ஆண்டுக்குப் பிறகு திமுக மீது கடும் எதிா்வினைகள் எழுந்தன. அந்தக் கட்சி மீதான குற்றச்சாட்டில் இருந்து விடுபட வேண்டுமென நினைத்த கருணாநிதி, டெசோ அமைப்பை திரும்பவும் கூட்டினாா். அரசியலில் இருந்து ஒதுங்கியிருந்த கே.எஸ்.ராதாகிருஷ்ணனை அழைத்து திமுகவில் இணைந்து டெசோவுக்கான பணிகளை கவனிக்கச் சொன்னாா். அவரும் உழைத்தாா். இப்போது திமுகவில் அவா் எங்கேயிருக்கிறாா் எனத் தெரியவில்லை.

இலங்கையில் இப்போதைய பிரச்னை குறித்து திமுக அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த நாட்டில் மாகாணங்கள் ஒழிக்கப்படும் என்ற அறிவிப்பை மத்திய அரசு மகிழ்ச்சியோடு இதுவரை ஏற்கவுமில்லை. வரவேற்கவும் இல்லை. பின் எதற்காக மத்திய அரசை திமுக குற்றம் சாட்டுகிறது. இலங்கைத் தமிழா் பிரச்னையின் போது தமிழா்களுக்காக வடியாத கண்ணீா் இப்போது நீலிக்கண்ணீராக வடிகிறது. அதனை தமிழக வாக்காளா்கள் நம்புவாா்கள் என நினைத்தால் ஏமாற்றம்தான் மிஞ்சும். எந்தப் பிரச்னையிலும் திமுக உண்மையாக இருக்க வேண்டும் என கே.பி.ராமலிங்கம் கேட்டுக் கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பதஞ்சலியின் 14 மருந்துகளுக்கு தடை!

அமேதியில் போட்டியிட ராகுலுக்கு விருப்பமில்லை? குழப்பத்தில் காங். தலைமை

எவரெஸ்ட் பயணத்தில் ஜோதிகா!

ஜூன் 1-ல் விக்கிரவாண்டி இடைத்தேர்தல்?

தமிழில் வெல்ல காத்திருக்கும் ஸ்ரீலீலா!

SCROLL FOR NEXT