ஒடிசா: ஐஐஎம் கட்டடத்திற்கு அடிக்கல் நாட்டினார் மோடி
ஒடிசாவில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இன்று (ஜன.2) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஒடிசாவில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் கட்டுவதற்காக இன்று (ஜன.2) பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டினார்.
ஒடிசா மாநிலம் சம்பல்பூர் பகுதியில் இந்திய மேலாண்மை நிறுவனத்திற்கு நிரந்தர கட்டடம் அமைக்கப்படவுள்ளது. இதற்கான அடிக்கல் நாட்டு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி காணொலி வாயிலாக கலந்துகொண்டு அடிக்கல் நாட்டினார்.
பின்னர் பிரதமர் மோடி பேசியதாவது, இன்று தொடங்கப்படும் சிறு தொழில்கள் நாளைய பெருநிறுவனங்களாக உருவாகின்றன. பெரும்பாலான சுய தொழில்கள் இரண்டு, மூன்று நகரங்களில் மட்டுமே தொடங்கப்படுகிறது. வேளாண்மை முதல் விண்வெளி ஆய்வு வரை சுயதொழில் தொடங்குவதர்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளது என்று கூறினார்.
Advertisement
இந்நிகழ்ச்சியில் ஒடிசா ஆளுநர் கணேஷி லால், முதல்வர் நவீன் பட்நாயக், மத்திய அமைச்சர் ரமேஷ் போக்ரியால் உள்பட பலர் காணொலி வாயிலாக கலந்து கொண்டனர்.