குடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு 
இந்தியா

குடியரசுத் தினவிழாவில் தில்லியில் பேரணி: விவசாயிகள் அறிவிப்பு

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

DIN

வேளாண் சட்டங்கள் திரும்பப் பெறாவிட்டால் மத்திய அரசுக்கு எதிராக குடியரசுத் தினத்தில் தில்லியில் பேரணியில் ஈடுபடுவோம் என விவசாய சங்கங்கள் அறிவித்துள்ளன.

வேளாண் சட்டங்களுக்கு எதிராக தலைநகர் தில்லியில் விவசாயிகள் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாகப் போராடி வருகின்றனர். மத்திய அரசுடன் நடைபெற்ற பல்வேறு கட்டப் பேச்சுவார்த்தைகளில் இதுவரை உறுதியான முடிவுகள் எட்டப்படாமல் உள்ளது.

இந்நிலையில் சனிக்கிழமை செய்தியாளர்களைச் சந்தித்த விவசாய சங்கப் பிரதிநிதிகள் ஜனவரி 23ஆம் தேதி நாடு முழுவதும் உள்ள ஆளுநர்களின் குடியிருப்புகளை நோக்கி டிராக்டர் அணிவகுப்பு மேற்கொள்ள உள்ளதாக அறிவித்தனர்.

மேலும் வேளாண் சட்டங்களைத் திரும்பப் பெறாவிட்டால் தில்லியில் குடியரசு தினமான ஜனவரி 26ஆம் தேதி விவசாயிகள் பேரணி நடைபெறும் என தெரிவித்தனர். இந்தப் பேரணியில் தில்லியைச் சுற்றியுள்ள மாநில விவசாயிகள் கலந்து கொள்ளவும், நாடு முழுவதும் உள்ள விவசாய குடும்பங்களின் சார்பில் குடும்பத்திற்கு ஒருவரும் கலந்து கொள்ளவும் விவசாய சங்கப் பிரதிநிதிகள் அறிவுறுத்தியுள்ளனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ரயில் கட்டணம் உயர்வு! டிச. 26 முதல் அமல்!

கோவையில் லாரி ஓட்டுநருக்கு திடீர் மாரடைப்பு! 4 கார்கள் மீது மோதி விபத்து

“யாரும் யாருக்கும் பணம் கொடுக்கவில்லை!” நேஷனல் ஹெரால்டு வழக்கு குறித்து ப. சிதம்பரம்

இந்திய சினிமாவிலேயே பிரம்மாண்ட இசை வெளியீட்டு விழா!

டெஸ்ட்டில் வரலாற்றுச் சாதனை நிகழ்த்திய நியூசி. வீரர் டெவான் கான்வே!

SCROLL FOR NEXT