முகப்பு
இந்தியா

சோதனை நிறைவடையாத நிலையில் கரோனா தடுப்பூசிக்கு அனுமதி: மணீஷ் திவாரி

மூன்றாம் கட்ட சோதனை நிறைவடையாத நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி குற்றம்சாட்டியுள்ளார்.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:12 PM
காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி
பகிர்:

மூன்றாம் கட்ட சோதனை நிறைவடையாத நிலையில் அரசியல் ஆதாயத்திற்காக கரோனா தடுப்பூசிக்கு மத்திய அரசு அனுமதியளித்துள்ளதாக குற்றம்சாட்டியுள்ளார்.

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்துள்ள ‘கோவேக்ஸின்’ தடுப்பூசி, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் உருவாக்கியுள்ள ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசி ஆகியவற்றை அவசர கால அடிப்படையில்

இந்தியாவில் பயன்படுத்த ஞாயிற்றுக்கிழமை அனுமதி அளிக்கப்பட்டது. அந்த அனுமதியை இந்திய மருந்துக் கட்டுப்பாட்டு இயக்குநரகம் அளித்தது. இதில் ‘கோவிஷீல்ட்’ தடுப்பூசியை இந்தியாவில் மகாராஷ்டிர மாநிலம் புணேவில் உள்ள சீரம் நிறுவனம் தயாரிக்கிறது.

இந்நிலையில் கரோனா தொற்று சூழலை அரசியல்ரீதியாக பாஜக பயன்படுத்தி வருவதாக காங்கிரஸ் மூத்தத் தலைவர் மணீஷ் திவாரி குற்றம்சாட்டியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள அவர்,“பாஜக அரசு கரோனா தொற்றுநோயை அரசியல்ரீதியாக தவறாகப் பயன்படுத்தியுள்ளது. கர்ரொனா தடுப்பூசியின் நம்பகத்தன்மை கேள்விக்குறியாகியுள்ளது” எனத் தெரிவித்துள்ளார்.

மேலும், “பாஜக அரசு தடுப்பூசி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் முதலீடு செய்திருக்க வேண்டும். தங்களது 'ஆத்மிரன்பர் பாரத்' திட்டத்தை நிரூபிப்பதற்காக மூன்றாம் கட்ட சோதனைகள் நிறைவடையாத ஒரு தடுப்பூசிக்கு உரிமம் வழங்கியுள்ளனர்” என திவாரி குற்றம்சாட்டியுள்ளார்.

முழு கட்டுரையைப் படிக்க →