நாட்டில் 6 மாதங்களுக்குப் பின்.. குறைவான ஒருநாள் கரோனா பாதிப்பு
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 16,375 பேருக்கு கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதித்தவர்களில் 201 பேர் பலியாகியுள்ளனர். சுமார் 6 மாதங்களுக்குப் பின் இந்த அளவுக்குக் குறைவான கரோனா பாதிப்பு உறுதியாகியுள்ளது.
இதன் மூலம் நாட்டில் தொடர்ந்து நான்காவது நாளாக புதிதாக கரோனா உறுதி செய்யப்படுவோரின் எண்ணிக்கை 20 ஆயிரத்துக்கும் கீழ் குறைந்துள்ளது.
இதையும் படிக்கலாமே.. தைப்பூசத்தன்று அரசு பொது விடுமுறை: முதல்வர் பழனிசாமி அறிவிப்பு
இதுவரை நாட்டில் கரோனா பாதித்தவர்களின் எண்ணிக்கை 1,03,56,844 ஆக உள்ளது. இவர்களில் 99.75 லட்சம் பேர் குணமடைந்துள்ளனர். இதன் மூலம் தொற்றிலிருந்து குணமடைவோர் எண்ணிக்கை 96.32 சதவீதமாக உள்ளது. கரோனாவுக்கு பலியானோர் எண்ணிக்கை 1,49,850 ஆக உள்ளது. இது 1.45 சதவீதமாகும்.
நாட்டில் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருவோரின் எண்ணிக்கை 15வது நாளாக 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது. இன்று காலை நிலவரப்படி 2,31,036 பேர் சிகிச்சை பெற்று வருகிறார்கள். இது மொத்த பாதிப்பில் 2.23 சதவீதமாகும்.