இந்தியா

பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறப்பு

DIN

சண்டிகர்: பஞ்சாபில் நாளை முதல் பள்ளிகள் திறக்கபப்டும் என்று அறவிப்பு வெளியாகியுள்ளது.

இதுதொடர்பாக மாநில பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் விஜய் இந்தர் சிங்லா புதனன்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:

மாநில அரசானது அனைத்து அரசுப் பள்ளிகள், அரசு உதவி பெறும் பள்ளிகள் மற்றும் தனியார் பள்ளிகளை நாளை (ஜனவரி 7) முதல் திறப்பது என்று முடிவுசெய்யப்பட்டுள்ளது.

திறக்கப்படும் பள்ளிகள் காலை 10 மணி முதல் மதியம் 3 மணி வரை செயல்படும்.

அதேபோல ஐந்து முதல் பன்னிரண்டாம் வகுப்பு வரையிலான மாணவர்கள் மட்டுமே வகுப்புகளில் அனுமதிக்கப்படுவார்கள்.

கரோனா தொற்றுப் பரவலைத் தடுக்கும் விதமாக அரசின் வழிகாட்டுதல்கள் அனைத்தையும் முறையாக பின்பற்றுமாறு பள்ளி நிர்வாகங்கள் அறிவுறுத்தப்படும்.

இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அஞ்சலி.. அஞ்சலி..!

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு வாகனங்கள் மீது துப்பாக்கிச்சூடு: 5 வீரர்கள் காயம்

அரசுப் பேருந்துகளில் உதகை வருவோருக்கு இ-பாஸ் தேவையில்லை

மாரி செல்வராஜ் - துருவ் விக்ரம் படத்தின் அப்டேட்!

வடலூர்: நாம் தமிழர் கட்சியின் போராட்டம் ஒத்திவைப்பு

SCROLL FOR NEXT