பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் பஞ்சாப் அரசு
உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
சண்டிகர்: உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டத்தினை பஞ்சாப் அரசு அறிவித்துள்ளது.
இதுதொடர்பாக வியாழனன்று பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங்கின் ஊடக ஆலோசகர் ரவீன் துக்ரல் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியுள்ளதாவது:
பஞ்சாப் முதல்வர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ள பல்வேறு நலத்திட்டங்களின் ஒரு பகுதியாக உயர்நிலைப் பள்ளி மற்றும் கல்லூரி மாணவிகளுக்கு இலவச சானிடரி பேட் வழங்கும் திட்டம் மற்றும் ஜனவரி மாதத்தினை பெண் குழந்தைகளுக்கான மாதமாக அறிவித்தல் உள்ளிட்டவை இடம்பெற்றுள்ளன.
மேலும் குடிசை வாழ் மக்களுக்கான வீட்டு வசதித் திட்டம், மின்சார நுகர்வோர்களுக்கான டிஜிட்டல் மீட்டர் பொருத்தும் திட்டம் மற்றும் 2500 இளைஞர்களுக்கு கிரிக்கெட் பொருட்கள் அடங்கிய பை வழங்குதல் மற்றும் நுகர்வோர்களுக்கான சிறப்பு குறைதீர் இணையதளம் ஆகியவையும் அடங்கும்.
இவ்வாறு அவர் பதிவிட்டுள்ளார்.