கரோனா: குணமடைந்தோர் விகிதம் 96.39% ஆக உயர்வு
நாடு முழுவதும் புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
புது தில்லி: நாடு முழுவதும் புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில் மேலும் கூறப்பட்டிருப்பதாவது:
வெள்ளிக்கிழமை காலை 8 மணி வரை நிலவரப்படி, புதிதாக 18,139 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால், மொத்தம் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 1,04,13,417-ஆக அதிகரித்துள்ளது.
கரோனா தொற்றுக்கு மேலும் 234 போ் உயிரிழந்தனா். இதனால் இதுவரை உயிரிழந்தோா் எண்ணிக்கை 1,50,570-ஆக அதிகரித்துள்ளது. உயிரிழப்போரின் விகிதம் 2.16% ஆக குறைந்துள்ளது.
கரோனா தொற்றில் இருந்து மேலும் 20,539 போ் குணமடைந்தனா். இதனால், இதுவரை குணமடைந்தோா் மொத்த எண்ணிக்கை 1,00,37,398-ஆக அதிகரித்தது. குணமடைந்தோரின் விகிதம் 96.30% ஆக உயர்ந்துள்ளது.
கரோனாவுக்கு சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை படிப்படியாகக் குறைந்து கொண்டே வருகிறது. நாடு முழுவதும் 2,25,449 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். தொடா்ந்து 18-ஆவது நாளாக, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 3 லட்சத்துக்கும் குறைவாக உள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆா்.) தகவல்படி, ஜனவரி 7-ஆம் தேதி வரை 17,93,36,364 கோடி கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில், வியாழக்கிழமை மட்டும் 9,35,369 கரோனா மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.