இந்தியா

தில்லியில் பறவைகளை தருவிக்கத் தடை: கேஜரிவால்

DIN

தில்லியில் கோழி உள்ளிட்ட பறவைகளை கொண்டுவர தடை விதித்து முதல்வர் அரவிந்த் கேஜரிவால் உத்தரவிட்டுள்ளார்.

தில்லியில் கடந்த 2 முதல் 3 நாள்களாக 200க்கும் அதிகமான பறவைகள் இறந்துள்ளன. மத்திய உயிரியல் பூங்காவில் காகம் உள்ளிட்ட பறவைகளும் அடுத்தடுத்து இறந்து வருகின்றன.

இதனால் பறவைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு பஞ்சாப் மாநிலம் ஜலந்தர் ஆய்வகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில் இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் கேஜரிவால், ''பறவைகளின் மாதிரிகள் பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. நாளை மறுநாள் பரிசோதனை முடிவுகள் வெளியாகும். பறவைக் காய்ச்சல் பரவி வரும் சூழலில் போதிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை தில்லி அரசு எடுத்து வருகிறது.

இதனால் தில்லி நகருக்குள் பறவைகளை கொண்டுவருவதற்கு தடை விதிக்கப்படுகிறது. காஸிப்பூர் பண்ணை அடுத்த 10 நாள்களுக்கு செயல்படாது'' என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஐபிஎல்: சென்னை வெற்றி பெற 142 ரன்கள் இலக்கு

ஜார்க்கண்ட்: காங். அமைச்சருக்கு அமலாக்கத்துறை சம்மன்!

மேற்கு வங்கத்தில் பாஜக அலை வீசுமா? நட்சத்திர வேட்பாளர்களிடையே போட்டி

பேல் பூரி

மும்பை இந்தியன்ஸின் வெற்றியை கடினமாக்கிய வருண் சக்கரவர்த்தி: ஆஸி. முன்னாள் வீரர்

SCROLL FOR NEXT