இந்தியா

ஸ்ரீநகரில் பனிப்பொழிவு: இயல்பு வாழ்க்கை பாதிப்பு

DIN

ஜம்மு-காஷ்மீரின் ஸ்ரீநகரில் தொடரும் பனிப்பொழிவால் பல்வேறு பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது.

கடும் பனிப்பொழிவைத் தொடர்ந்து ஜம்மு-ஸ்ரீநகர் தேசிய நெடுஞ்சாலையில் வாகனங்கள் இயக்க முடியாததால் போக்குவரத்து பாதிப்படைந்துள்ளது. 

"பனிப்பொழிவு மக்களின் இயல்பு வாழ்க்கையை சீர்குலைத்துள்ளது. பனிப்பொழிவால் வாகனங்கள் சாலையில் பயணிக்க முடியவில்லை” என உள்ளூர் மக்கள் தெரிவித்து வருகின்றனர்.

பனியால் சிக்கித் தவிக்கும் சுற்றுலாப் பயணிகளுக்கு தற்காலிகத் தங்குமிடங்களை சுற்றுலாத்துறை ஏற்பாடு செய்துள்ளது. மேலும் பனிப்பொழிவு மற்றும் மழையை கருத்தில் கொண்டு தேவையின்றி வெளியே செல்ல வேண்டாம் என்று மாவட்ட நிர்வாகம் பொதுமக்களை அறிவுறுத்தியுள்ளது.

முன்னதாக, கடுமையான பனிப்பொழிவு காரணமாக சில நாட்களுக்கு விமான போக்குவரத்து நிறுத்தி வைக்கப்பட்ட நிலையில் வியாழக்கிழமை முதல் மீண்டும் விமான சேவை தொடங்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரகாசபுரத்தில் தண்ணீா் பந்தல் திறப்பு

வடிகாலை ஆக்கிரமித்து கட்டுமானப் பணிகள்: நகா்மன்ற உறுப்பினா் புகாா்

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

SCROLL FOR NEXT