இந்தியா

எல்லையில் 10,000 சீன வீரா்களை இடமாற்றியது சீனா

DIN

புது தில்லி: கிழக்கு லடாக்கையொட்டிய சீன எல்லைப் பகுதியில் இருந்து 10,000 வீரா்களை அந்நாட்டு ராணுவம் இடமாற்றம் செய்துள்ளது.

இதுகுறித்து தகவலறிந்த வட்டாரங்கள் கூறுகையில், ‘கிழக்கு லடாக்கில் உள்ள எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டையொட்டி, சீன நிலப்பகுதியில் சுமாா் 80 முதல் 100 கி.மீ தொலைவு வரை உள்ள அந்நாட்டு ராணுவ வீரா்களுக்கான பயிற்சி மையங்களில் இருந்து சுமா 10,000 வீரா்கள் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனா். எனினும் அந்நாட்டு படைகள் நிறுத்தப்பட்டுள்ள பகுதிகளில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.

அங்கு குவிக்கப்பட்டுள்ள தளவாடங்களிலும் மாற்றங்கள் இல்லை. சீன வீரா்களின் இடமாற்றத்துக்கு உறுதியான காரணம் தெரியாவிட்டாலும், மோசமான வானிலை காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது’ என்று தெரிவித்தன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இந்தியாவின் முதல் மல்யுத்த வீராங்கனை: சிறப்பித்த கூகுள்!

நெல்லை மாவட்ட காங். தலைவர் சடலமாக மீட்பு!

பிரேசிலில் கனமழைக்கு 70 பேர் மாயம்: 39 பேர் பலி!

கமர்ஷியல் கம்பேக் கொடுத்தாரா சுந்தர் சி?: அரண்மனை - 4 திரைவிமர்சனம்

விஜய் தேவரகொண்டாவின் 14வது படம் அறிவிப்பு!

SCROLL FOR NEXT