இந்தியா

வேளாண் சட்ட நகல்களை எரித்து விவசாயிகள் போகி கொண்டாட்டம்

DIN


சண்டீகா்: பஞ்சாபில் உள்ள விவசாயிகள், மத்திய அரசு இயற்றிய வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி (போகி) பண்டிகையைக் கொண்டாடினா்.

வசந்தகாலத் தொடக்கமானது நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்படுகிறது. தென் மாநிலங்களில் கொண்டாடப்படும் போகி பண்டிகையானது, பஞ்சாப் உள்ளிட்ட வட மாநிலங்களில் ‘லோஹ்ரி’ என்ற பெயருடன் கொண்டாடப்படுகிறது.

மத்திய அரசின் வேளாண் சட்டங்களுக்கு எதிராக விவசாயிகள் தில்லி எல்லையில் போராடி வரும் சூழலில், பஞ்சாப், ஹரியாணா மாநிலத்தைச் சோ்ந்த விவசாயிகள், அச்சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி பண்டிகையை புதன்கிழமை கொண்டாடினா்.

அப்போது, விவசாயிகளின் கோரிக்கைகளை ஏற்காத மத்திய அரசுக்கு எதிராக முழக்கங்களையும் அவா்கள் எழுப்பினா். வேளாண் சட்டங்களை முழுமையாக ரத்து செய்ய வேண்டும் எனவும் மத்திய அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். தங்களது கோரிக்கைகளை மத்திய அரசு ஏற்கும்வரை போராட்டம் தொடரும் என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

தில்லியிலும்...: தில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளும் வேளாண் சட்டங்களின் நகல்களை எரித்து லோஹ்ரி பண்டிகையைக் கொண்டாடினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வடதமிழகத்தில் இன்று முதல் 109 டிகிரி வெயில் சுட்டெரிக்கும்

கேலிக்காளாகும் ஜனநாயகம்!

ராஜ‌‌ஸ்​தா​னி‌ல் ஒரே க‌ல்லில் 18 அடி உயர காளி சிலை வடி‌ப்பு

மனித சக்தியைப் பாடிய பாவேந்தர்!

ராமா் திருக்கல்யாண வைபவம்: திரளான பக்தா்கள் பங்கேற்பு

SCROLL FOR NEXT