ம.பி. போலி மதுபான விவகாரம்: முதல்வர் ஆலோசனை
மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் மேற்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேசத்தில் போலி மதுபானம் அருந்திய விவகாரத்தில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது. இதனைத் தொடர்ந்து அதிகாரிகளுடன் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் மேற்கொண்டுள்ளார்.
மத்தியப் பிரதேச மாநிலம் மொரேனா மாவட்டத்தில் போலி மதுபானம் அருந்தியதாக கடந்த 12-ஆம் தேதி மருத்துவமனையில் பலர் அனுமதிக்கப்பட்டனர்.
இதில் சுமவாலியில் நான்கு பேரும், மன்பூர் கிராமங்களில் 7 பேரும் கடந்த 12-ஆம் தேதி உயிரிழந்தனர். அதனைத் தொடர்ந்து தற்போது வரை உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 20-ஆக அதிகரித்துள்ளது.
மேலும் 15-க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இதனைத் தொடர்ந்து இந்த விவகாரத்தில் மெத்தனப்போக்காக செயல்பட்ட மாவட்ட ஆட்சியர் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளரை பதவி நீக்கம் செய்து முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக உயர் மட்ட அதிகாரிகளுடன் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் ஆலோசனை மேற்கொண்டுள்ள்ளார்.