இந்தியா

கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது: ஹர்ஷ் வர்தன்

DIN


கரோனாவிற்கு எதிரான போராட்டம் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளதாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் தெரிவித்துள்ளார்.

நாடு முழுவதும் கரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று (ஜன.16) காலை 10.30 மணியளவில் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது.

அந்தவகையில் தில்லியில் கரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேரில் பார்வையிட்டார்.

அப்போது பேசிய அவர், கரோனா தடுப்பூசி பணிகள் தொடங்கியுள்ள நாள் மகிழ்ச்சியையும், திருப்தியையும் அளிக்கிறது.

பிரதமர் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் ஓராண்டுக்கும் மேலாக கரோனாவிற்கு எதிராக போராடி வருகிறோம். அந்த போராட்டம் தற்போது இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளது என்று கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தட்டச்சுப் பள்ளிகள் கேட்கும் தோ்வு மையத்தை ஒதுக்கக் கோரிக்கை

கேரளம், தென் தமிழக கடலோர பகுதிகளுக்கு ‘கள்ளக்கடல்’ எச்சரிக்கை!

குடிநீா் விநியோகப் பணிகள்: ஆட்சியா் ஆய்வு

ஒட்டங்காடு மாரியம்மன் கோயில் கும்பாபிஷேகம்

‘ரஷியாவுக்குள் தாக்குதல் நடத்த பிரிட்டன் ஆயுதங்களைப் பயன்படுத்தலாம்’

SCROLL FOR NEXT