முகப்பு
இந்தியா

மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,294 பேருக்கு கரோனா

​மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,294 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:19 PM
கோப்புப்படம்
பகிர்:


மகாராஷ்டிரத்தில் புதிதாக 2,294 பேருக்கு கரோனா வைரஸ் நோய்த் தொற்று இருப்பது இன்று (செவ்வாய்க்கிழமை) உறுதி செய்யப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர கரோனா பாதிப்பு நிலவரம் பற்றிய தரவுகள் வெளியாகியுள்ளன. புதிதாக 2,294 பேருக்கு நோய்த் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டதைத் தொடர்ந்து, மொத்தம் பாதித்தோர் எண்ணிக்கை 19,94,977 ஆக உயர்ந்துள்ளது.

மேலும் 4,516 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்துள்ளனர். இதுவரை மொத்தம் 18,94,839 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இன்றைய அறிவிப்பில் மேலும் 50 பேர் பலியானதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து, மொத்த பலி எண்ணிக்கை 50,523 ஆக உயர்ந்துள்ளது.

Advertisement

இன்றைய நிலவரப்படி 48,406 பேர் இன்னும் நோய்த் தொற்றுக்கான சிகிச்சையில் உள்ளனர்.

மகாராஷ்டிரத்தில் குணமடைவோர் விகிதம் 94.98 சதவிகிதமாக உள்ளது. இறப்பு விகிதம் 2.53 சதவிகிதமாக உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

கருத்துகள், எதிர்வினைகள் மற்றும் பகிர்வு

View share bar
Show reactions
View quiz
Show comments