முகப்பு
இந்தியா

ஜம்மு-காஷ்மீரில் பாகிஸ்தான் அத்துமீறல்: 4 வீரர்கள் காயம்

ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் செக்டாரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டது.

Updated On : 27 ஜனவரி, 2024 at 7:20 PM
ஜம்மு காஷ்மீர் எல்லையில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறல்
பகிர்:

ஜம்மு-காஷ்மீரின் அக்னூர் செக்டாரின் சர்வதேச எல்லைப் பகுதியில் பாகிஸ்தான் ராணுவம் அத்துமீறித் தாக்குதலில் ஈடுபட்டது. இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் காயமடைந்ததாக அதிகாரிகள் புதன்கிழமை தெரிவித்தனர். 

கெரி பட்டால் எல்லைப் பகுதியில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவில் பாகிஸ்தான் ராணுவம் தொடர்ந்து அத்துமீறி துப்பாக்கிச்சூடு நடத்தினர். 

இந்த தாக்குதலில் நான்கு வீரர்கள் பலத்த காயமடைந்தனர். பின்னர் நால்வரும் சிகிச்சைக்காக உதம்பூரில் உள்ள ராணுவ மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.