இந்தியா

பேரறிவாளன் விடுதலை கோரி வழக்கு: உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம்

DIN


புது தில்லி: பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

ஏற்கனவே, பேரறிவாளன் உள்ளிட்டோர் விடுதலை தொடர்பாக மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.

இந்த நிலையில், ராஜீவ் காந்தி கொலை வழக்கிலிருந்து தன்னை விடுவிப்பது தொடர்பாக பேரறிவாளன் தொடர்ந்த மனு உச்ச நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்தது.

அப்போது, பேரறிவாளன் விடுதலை தொடர்பாக யார் முடிவெடுக்க வேண்டும் என்பது குறித்த சிக்கலுக்குத் தீர்வு காண வேண்டும் என்றும், பேரறிவாளனை விடுதலை செய்வது குறித்து குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க வேண்டும் என்றும் மத்திய அரசு தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது.

அதேவேளையில், பேரறிவாளன் உள்ளிட்டோரை விடுதலை செய்வது குறித்து மாநில ஆளுநர் முடிவெடுக்கலாம் என்று உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவுக்கு எதிராக மத்திய அரசு எந்த மனுவும் தாக்கல் செய்யவில்லை என்று பேரறிவாளன் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

3 மாவட்டங்களில் அடுத்த 3 மணி நேரத்துக்கு மழைக்கு வாய்ப்பு!

இந்தியாவில் அதிக வெயில் பதிவான இடங்கள்: 3-வது இடத்தில் பரமத்தி..!

பள்ளிகளில் தொலைபேசி பயன்பாட்டுக்கு தடை: அமைச்சர் மதன் திலாவர்

சாராயம் காய்ச்சுவோா் மீது கடும் நடவடிக்கை: திருப்பத்தூா் எஸ்.பி. எச்சரிக்கை

மும்பைக்கு 174 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ஹைதராபாத்!

SCROLL FOR NEXT