இந்தியா

ராமர் கோயில் கட்ட பாஜக எம்.பி. கெளதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை

DIN

உத்தரப்பிரதேசத்தில் ராமர் கோயில் கட்ட பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோயில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் கோயில் கட்டுவதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூல் செய்யப்பட்டு வருகிறது.

இந்நிலையில் ராமர் கோயில் கட்டுவதற்காக பாஜக நாடாளுமன்ற உறுப்பினரும், முன்னாள் கிரிக்கெட் வீரருமான கெளதம் கம்பீர் ஸ்ரீராம ஜென்மபூமி அறக்கட்டளைக்கு ரூ.1 கோடி நன்கொடை வழங்கியுள்ளார்.

“ராமர் கோயில் அனைத்து இந்தியர்களின் கனவாக இருந்து வருகிறது. இறுதியாக இந்த நீண்டகால பிரச்னை முடிவுக்கு வந்தது. இது ஒற்றுமைக்கும் அமைதிக்கும் வழி வகுக்கும்” என கம்பீர் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, அயோத்தியில் ராமர் கோயில் கட்டுவதற்கு மத்திய பிரதேச முதல்வர் சிவ்ராஜ் சிங் சவுகான், குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் ஆகியோர் நன்கொடை அளித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பொதுத்துறை நிறுவனத்தில் வேலை: விண்ணப்பிப்பது எப்படி?

கல்கி - வில்லனாக கமல்ஹாசன்?

என்ன விலை அழகே... ஸ்ரீமுகி!

கொளுத்தும் கோடை வெயில்: தில்லிக்கு ‘சிவப்பு எச்சரிக்கை’

பகல் நிலவு.. அதிதி போஹன்கர்!

SCROLL FOR NEXT