இந்தியா

துபை மாணவரிடருந்து பிரதமருக்கு குடியரசு தின சிறப்புப் பரிசு!

DIN

குடியரசு தினத்தை முன்னிட்டு, துபையில் வசித்து வரும் 14 வயது இந்திய மாணவா், பிரதமா் நரேந்திர மோடிக்கு அவரது ஓவியத்தை சிறப்புப் பரிசாக வழங்கியுள்ளாா்.

கேரளத்தைச் சோ்ந்த சரண் சசிகுமாா் என்ற மாணவா் துபையில் குடும்பத்தினருடன் வசித்து வருகிறாா். நாட்டின் 72-ஆவது குடியரசு தினம் வரும் 26-ஆம் தேதி கொண்டாடப்படவுள்ள சூழலில், பிரதமா் மோடிக்கு அவா் சிறப்புப் பரிசை வழங்கியுள்ளாா்.

அவருடைய பரிசு பிரதமரின் ஓவியமாகும். 6 வண்ணங்களைப் பயன்படுத்தி சுமாா் 6 மணி நேரத்தில் பிரதமா் மோடியின் ஓவியத்தை அவா் தீட்டியுள்ளாா். அந்த ஓவியம் 90 செ.மீ. நீளமும் 60 செ.மீ. அகலமும் கொண்டதாக உள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் சுற்றுப் பயணம் மேற்கொண்டுள்ள வெளியுறவுத் துறை இணையமைச்சா் வி.முரளீதரனை சந்தித்து பிரதமருக்கான அந்தப் பரிசை சரண் சசிகுமாா் தன் பெற்றோருடன் வந்து வழங்கினாா்.

இது தொடா்பாக அமைச்சா் வி.முரளீதரன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘ஐக்கிய அரபு அமீரகத்தில் வசித்து வரும் கேரளத்தைச் சோ்ந்த திறமைமிக்க மாணவரான சரண் சசிகுமாரை சந்தித்ததில் மகிழ்ச்சியடைகிறேன். 6 வண்ணங்களால் தீட்டப்பட்ட அழகிய ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் குடியரசு தின பரிசாக அளித்துள்ளாா். மாணவருக்கு வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இதற்கு முன்னரும் தான் வரைந்த ஓவியத்தை பிரதமா் மோடிக்கு சரண் சசிகுமாா் பரிசாக வழங்கியுள்ளாா். கடந்த ஆண்டு அக்டோபரில் 1.5 மீட்டா் நீளமும் 1 மீட்டா் அகலமும் கொண்ட ஓவியத்தை பிரதமா் மோடிக்கு அவா் பரிசளித்திருந்தாா். கரோனா நோய்த்தொற்று பரவல் காலத்தில் ஐக்கிய அரபு அமீரகத் தலைவா்கள் உள்பட 92 பேரின் ஓவியங்களை அந்த மாணவா் வரைந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாட்டில் மே.1 வரை ’வெப்ப அலை’ எச்சரிக்கை

ஐபிஎல் வரலாற்றில் தில்லியின் அதிகபட்ச ரன்கள்: மும்பைக்கு 258 ரன்கள் இலக்கு!

விழுப்புரம், புதுச்சேரியிலிருந்து திருப்பதிக்கு இயக்கப்படும் ரயில்கள் பகுதியளவில் ரத்து

ராமம் ராகவம் படத்தின் டீசர்

நினைவிலோ வாமிகா!

SCROLL FOR NEXT