இந்தியா

குஜராத்தில் பிப்.1 முதல் பள்ளிகள் திறப்பு

DIN

குஜராத்தில் பிப்ரவரி 1 முதல் 9 மற்றும் 11 ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் மீண்டும் திறக்கப்படும் என மாநில கல்வித்துறை அமைச்சர் பூபேந்திர சிங் புதன்கிழமை அறிவித்தார்.

கரோனா தொற்று காரணமாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் முதல் கல்வி நிலையங்கள் மூடப்பட்டன. மாநிலங்களின் தொற்று பாதிப்பு நிலைகளுக்கேற்ப பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தற்போது படிப்படியாக திறக்கப்பட்டு வருகின்றன.

இந்நிலையில் குஜராத் மாநிலத்தில் 9 மற்றும் 11ஆம் வகுப்புகளுக்கு பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளிகள் திறக்கப்படும் என மாநிலக் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் பூபேந்திர சிங் புதன்கிழமை அறிவித்தார். 

கரோனா தொற்று பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுடன் பள்ளிகள் திறக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது. 

முன்னதாக ஜனவரி 11ஆம் தேதி முதல் 10 மற்றும் 12ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அதிக வெப்ப அலையிலிருந்து தற்காத்துக் கொள்ள அறிவுறுத்தல்

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

SCROLL FOR NEXT