இந்தியா

146 மாவட்டங்களில் ஒரு வாரமாக புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை: மத்திய அமைச்சர் ஹர்ஷவர்தன்

DIN

146 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாக புதிதாக தொற்று கண்டறியப்படவில்லை என்று மத்திய அமைச்சர் சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் தெரிவித்துள்ளார். 

கொவைட்-19 மேலாண்மைக்கான  23-ஆவது அமைச்சர்கள் குழு கூட்டத்துக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷவர்தன் இன்று காணொலிக் காட்சி மூலம் தலைமை தாங்கினார்.  மத்திய அமைச்சர்கள் பலர் கலந்து கொண்ட இந்தக் கூட்டத்தில் டாக்டர் ஹர்ஷ வர்தன் பேசியதாவது, கொவைட் மேலாண்மைக்காக அமைக்கப்பட்ட அமைச்சர்கள் குழு கடந்த ஓராண்டாக செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.  கடந்த ஆண்டு ஜனவரி 30ஆம் தேதி, முதல் கொவைட் பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. கொவைட்-19 மேலாண்மைக்காக அமைச்சர்கள் குழுவின் முதல் கூட்டம் கடந்த 2020ஆம் ஆண்டு பிப்ரவரி 3ஆம் தேதி கூட்டப்பட்டது. 

பிரதமர் நரேந்திர மோடி வகுத்த, ஒட்டு மொத்த அரசு மற்றும் சமூக அணுகுமுறை காரணமாக, இந்த கொவைட் தொற்றை இந்தியா வெற்றிகரமாக கட்டுப்படுத்தியது. கடந்த 24 மணி நேரத்தில் 12,000-க்கும் குறைவாகவே புதிய தொற்று ஏற்பட்டுள்ளது. சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 1.73 லட்சமாக குறைந்துள்ளது. 146 மாவட்டங்களில் கடந்த ஒரு வாரமாகவும், 18 மாவட்டங்களில் கடந்த 14 நாள்களாகவும், 6 மாவட்டங்களில் கடந்த 21 நாள்களாகவும், 21 மாவட்டங்களில் கடந்த 28 நாள்களாகவும் புதிதாக தொற்று ஏற்படவில்லை. தீவிர கொவைட் பரிசோதனையால், இந்த சாதனை படைக்கப்பட்டுள்ளது. 

இதுவரை 19.5 கோடி கொவைட் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. தற்போது நாள் ஒன்றுக்கு 12 லட்சம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. கொவைட் சிகிச்சை பெறுபவர்களில் 0.46 சதவீதம் பேர் மட்டுமே வென்டிலேட்டரில் உள்ளனர். 2.20 சதவீதம் பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர். 3.02 சதவீதத்தினர் ஆக்ஸிஜன் உதவியுடன் சிகிச்சை பெறுகின்றனர். இதுவரை 165 பேருக்கு, இங்கிலாந்தின் புதிய வகை கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தீவிர கண்காணிப்பில் உள்ளனர். 

இந்த உலகளாவிய சுகாதார நெருக்கடி நிலையிலும், இந்தியா இதர நாடுகளுக்கு கொவைட்-19 தடுப்பூசி விநியோகித்து உதவியுள்ளது. பல நாடுகளில் தடுப்பூசி போடுபவர்களுக்கு இந்தியா பயிற்சி அளித்துள்ளது என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

வாக்கு எண்ணும் பணி: குலுக்கல் முறையில் அலுவலா்கள் தோ்வு

ரஃபேல் நடால் முன்னேற்றம்

வாக்கு எண்ணும் மையம் அருகே 2 கி.மீ. சுற்றளவுக்கு டிரோன் பறக்கத் தடை

பொன்னேரி-மீஞ்சூா் இடையே போதிய பேருந்துகள் இல்லாததால் மக்கள் அவதி

ஹைதராபாதை வீழ்த்தியது சென்னை!

SCROLL FOR NEXT