இந்தியா

மேற்கு வங்க சட்டப்பேரவையில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றம்

DIN

மேற்கு வங்க சட்டப்பேரவைக் கூட்டத்தொடரில் ஆளும் திரிணமூல் அரசு வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றி உள்ளது.

வேளாண் சட்டங்களை எதிர்த்து கடந்த 60 நாள்களுக்கும் மேலாக தலைநகர் தில்லியில் விவசாயிகள் போராடி வருகின்றனர். பாஜக அல்லாத பல்வேறு மாநில அரசுகளும் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தங்களது சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி வருகின்றன.

இந்நிலையில் மேற்கு வங்க மாநில அரசு வியாழக்கிழமை நடைபெற உள்ள சட்டப்பேரவைக் கூட்டத்தில் வேளாண் சட்டங்களுக்கு எதிராக தீர்மானம் தாக்கல் செய்யப்பட்டது. அதனைத் தொடர்ந்து பெரும்பான்மை ஆதரவுடன் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. மேற்கு வங்க அரசின் இந்தத் தீர்மானத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜக உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்தனர்.

முன்னதாக வேளாண் சட்டங்களை எதிர்த்து பேசிய முதல்வர் மம்தா பானர்ஜி, “வேளாண் சட்டங்கள் விவசாயிகளுக்கு எதிரானவை” எனத் தெரிவித்தார்.  

முன்னதாக பஞ்சாப், சத்தீஸ்கர், ராஜஸ்தான், கேரளம் மற்றும் தில்லி ஆகிய மாநிலங்கள் வேளாண் சட்டங்களுக்கு எதிராகத் தீர்மானம் நிறைவேற்றி உள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காஞ்சிபுரம் புண்ணிய கோடீஸ்வரர் கோயிலில் மகா கும்பாபிஷேகம்!

தினமணி செய்தி எதிரொலி கொள்ளிடத்தில் பொக்லைன் மூலம் குப்பைகள் அகற்றம்

இன்று யோகம் யாருக்கு?

இன்று நல்ல நாள்!

நாகை - இலங்கை இடையே பயணிகள் கப்பல் போக்குவரத்து தொடங்குவதில் தொடரும் சிக்கல்

SCROLL FOR NEXT